districts

img

3 ஆவது ஒயிலாட்டம் அரங்கேற்றம்

கோவை, செப்.14- கோவை சிம்மக்குரல் நாட்டுப்புறக் கலைக்குழுவின் 3-ஆவது ஒயிலாட்ட அரங்கேற்றம் சின்னவேடம்பட்டி வட்டம்,  உடையாம்பாளையத்தில் நடைபெற்றது.  6 மாத காலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்  வரை சுமார் 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பயிற்சி பெற்றனர்.  இதில் நாட்டு மாடுகள், குதிரைகள் ஊர்வலமாக வந்து ஒயி லாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது. இதனை ஏராளமா னோர் நிகழ்வை கண்டு ரசித்தனர்.  இவ்விழாவில், பயிற்சியாளர் ரங்கசாமி காளியப்பன், ச. விக்னேஷ்வர், ஆசிரியர் ஜெ.பிரவின்குமார், நாதேக் கவுண்டன்புதூர் கலைஞர்கள் சௌமிசா, அபி, ரம்யா, கடத்தூர் பயிற்சியாளர்கள் பிரதீப் குமார், கவீன்குமார், தீப்திஹா, கார்த்திகேயன் மற்றும் குன்னத்தூர் புதூர் சுரேஷ்  குமார் உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.