திருப்பூர், டிச.2- தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் உணவுப் பாது காப்புத் துறை அதிகாரிகள் ஞாயிறன்று 31 கிலோ கெட்டுப் போன மீன்களை பறிமுதல் செய்தனர். திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஞாயிறன்று சோதனை ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு விற் பனை செய்வதற்காக வைத்திருந்த 31 கிலோ கெட்டுப் போன மீன்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், தடை செய் யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.