சேலம், மே 19- கன்னங்குறிச்சியில் 250 மாணவர்கள் ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பகுதியில் செயல்படும் வீரச்சிலம்பொலி கலைக்கூடம் சார்பில், மாணவ, மாணவிக ளுக்கு இலவசமாக சிலம்பம் கற்று தரப்படுகிறது. இந்நிலை யில், நோபல் வேல்ட் ரெக்கார்ட் அமைப்பின் மூலம் 250 பேர் மாணவர்கள் 120 நிமிடங்களில் 120 சுற்றுகள் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனையை நிகழ்த்தினர். இதற்காக கன்னங் குறிச்சி பகுதியில் காலை 7.15 மணி அளவில் உலக சாதனை நிகழ்ச்சி துவக்கப்பட்டு 8.50மணி அளவில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசான் பி.முரு கேசன் தலைமை வகித்தார். இதில் மாநகரக் காவல் துணை ஆணையர் கே.பாபு, கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.