கோவை, ஆக. 6- வாளையார் அணையில் குளிக்கச் சென்ற தமிழ கத்தைச் சேர்ந்த 2 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத் தை ஏற்படுத்தியுள்ளது. கேரள தீயணைப்புத்துறை விரர்கள் 5 மணி நேர தேர்தல் வேட்டைக்கு பிறகு உடல்களை மீட்டனர். கோவை மாவட்டம், நவக்கரை பகுதி யில் தனியார் பொறியியல் கல்லூரி (தன லட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி) செயல்பட்டு வருகிறது. இங்கு கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரி விடுதி யில் வங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் 8 பேர், தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையார் அணைக்கு சென்றுள்ளனர். அப்போது உற் சாக மிகுதியில் 3 மாணவர்கள் குளிப்பதற் காக தண்ணீரில் இறங்கியுள்ளனர். அணை யின் ஆழமான பகுதிக்கு சென்ற மூவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். மேலும் தங்களைக் காப்பாற்றும்படி அபயக் குரல் எழுப்பினர். இதனைப் பார்த்த சக மாண வர்கள் உடனடியாக வாளையார் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் விஷ்ணுகுமார் (18) என்ற மாணவர் மட்டும் மீட்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த கேரள போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேர தேர்தல் வேட்டைக்கு பிறகு பொள்ளாச்சி யைச் சேர்ந்த திருப்பதி (18) மற்றும் நாமக்கலை சேர்ந்த சண்முகம் (18) ஆகிய இருவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அணையின் ஆழமான பகுதியில் நீந்திய மாணவர்கள் சேற்றில் சிக்கி வெளிவேற முடியாமல் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள கேரள போலீசார், அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி தண்ணீரில் இறங்குபவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.