உடுமலை, ஏப்.12- உடுமலை அருகே 16 ஆம் நூற் றாண்டு கால புலிக்குத்தி கல்லை தற்போதும் பொதுமக்கள் வழி பட்டு வருகின்றனர். உடுமலைப் பகுதி முன்பு, தளி பாளையப்பட்டால் ஆட்சி செய்த பகுதியில், அப்போதைய மேய்ச்சல் நிலங்களும், கால்நடைகளுமே அப் போதைய வாழ்நிலை மக்களின் சொத்தாக இருந்து வந்துள்ளது. கால்நடைகளையும், மக்களையும் விலங்குகளிடமிருந்து காப்பாற்ற அன்றைய மக்கள் மிகவும் சிரமப் பட்டு உள்ளார்கள். இப்படி பொது மக்களையும், கால்நடைகளை விலங்குகளில் இருந்து காப்பாற் றும் வீரர்களுக்காக நடுகல் எழுப்பப் படும் வழக்கம் இருந்துள்ளது. உடுமலை பகுதியில் பொதுமக் களையும், கால்நடைகளையும் காப் பாற்றும் வகையில் எழுப்பட்ட புலிக் குத்திக்கல்கள் தேவனூர்புதூர், ஜிலோப்பநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து உள் ளது. மேலும், தளி பகுதிக்கு அரு கில் இருக்கும் ஜல்லிபட்டி ஊராட்சி பகுதியில் இருக்கும் வீரஜக்கம்மா கோயிலுக்கு செல்லும் வழியில் தனி யார் தோட்டத்தில் இருக்கும் கிணற்று மேட்டில் இரண்டடி உயர மும், ஒன்றே முக்கால் அடி உயர மும் கொண்ட புடைப்புச் சிற்பம் பழங்கால இலந்தை மரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இந்த இலந்தை மரத்திற்கு நூறு வயதிற்கும் மேலிருக்கும் என்கின்ற னர் அப்பகுதி பொதுமக்கள். இந்த புடைப்புச் சிற்பத்தில் ஆபரணங் கள், அணிகலன்கள் அணிந்திருக் கும் ஒரு வீரன் புலியின் வாயிலினில் வேலை சொருகி இருப்பது போன்று, இருக்கும் இந்த சிற்பம் பொம்ம நாயக்கர் என்றும், புலிக்குத்தி வீரன் என்றும் அந்தப் பகுதி மக்கள் வழி படுகின்றனர். தைப்பொங்கல் நாளில் சிறப்பு வழிபாடுகளும், மற்ற வெள்ளிக் கிழமை நாட்களில் தீபாராதனை வழிபாடும் நடத்துவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் இந்தப் புடைப்புச் சிற்பம் உருவாக்கப்பட்டி ருக்கலாம் எனவும், மக்களுக்காகப் பாடுபட்ட ஒரு அரசன் அல்லது தலைவனின் செயலைப்போற்றும் வகையில் இந்தப் புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டிருக்கலாம் தொல் லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரி விக்கின்றனர்.