கோவை. நவ. 28- கோவை மாநகரில் பல் வேறு வழக்குகளில் பறிமு தல் செய்யப்பட்ட வாகனங் கள் அந்தந்த காவல் நிலை யங்களில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. இதுதவிர பல இடங்களில் கேட்பாரற்று இருந்த வாகனங்களை காவல் துறையினர் மீட்டு அது திருட்டு வழக்கில் சம்பந் தப்பட்டதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை, பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர், குனியமுத் தூர் காவல் நிலைய பகுதிக ளில் கடந்த ஆறு மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 160 இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் மீட்டுள்ள னர். இந்த வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாத நிலையில் பொது ஏலத்தில் விட இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.