திருப்பூர், நவ.29- திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணி களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் புதனன்று திறந்து வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ. லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, வேட்டுவபா ளையத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.73.05 லட்சம் மதிப்பீட் டில் வேட்டுவபாளையம் முதல் பூமலுர் சாலை வரை தார்சாலை மேம்பாட்டு பணி, அமிர்தா காரட்னில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.75.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு கூட்ட மைப்பு கட்டிடம் என மொத்தம் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுசாமி, மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் மருதாசல மூர்த்தி, பணி மேற்பார்வையாளர் மகேந்திரன் மற்றும் உள் ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.