districts

img

வேலை பெறுவதை அடிப்படை உரிமையாக்கக் கோரி   இந்திய ஜனநாயக வாலிவர் சங்கம் சைக்கிள் பிரச்சார பயணம்

வேலை பெறுவதை அடிப்படை உரிமையாக்கக் கோரி  தர்மபுரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிவர் சங்க  மாவட்டச்  செயலாளர் ஜீவா, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற சைக்கிள் பிரச்சார பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகர் துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நடராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பிரச்சாரப் பயண குழுவிற்கு ஓசூர் ரயில் நிலையம், சானமாவு, உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.