districts

img

இருளர் குழந்தைகளின் ஆரோக்கியம்: காஞ்சிபுரம் ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம்,மே 26- உத்திரமேரூர் வட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை முகாம் அம்மையப்ப நல்லூர் மற்றும் மேல்துளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் 140 குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் அள வீடு செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஊட்டச்சத்து குறைவான குழந்தை களுக்கு வளர்ச்சி கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டு, குழந்தை யின் ஊட்டச்சத்து வளர்ச்சி மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு சத்துமாவு, கொழுக்கட்டை மற்றும் வேர்க்கடலை பர்பி வழங்கப்பட்டது. ஊட்டச்சத்து குறை பாடுள்ள குழந்தைகள் எவரும் விடுபடாமல் பரி சோதனை முகாமில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்தினார்.