districts

img

தோழர் எல்.கஸ்தூரி  படத்திறப்பு  விழா

காஞ்சிபுரம் மாவட்டம், கோவில் நிலங்களில் குடியிருப்போர் நலச்சங்க மாவட்டச் செயலாளர் டி.லிங்கநாதன் மனைவியும், காஞ்சிபுரம் மாவட்டக்குழு உறுப்பினர் டி.எல்.கார்த்திக் தாயாருமான தோழர் எல்.கஸ்தூரி  படத்திறப்பு  செவ்வாயன்று (மே.31) நடைபெற்றது.  குன்றத்தூர் வட்டக்குழு உறுப்பினர் ஆர்.சுகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் படத்தை திறந்துவைத்தார்.   மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இ.முத்துக்குமார், சாமி நடராஜன், காஞ்சிபுரம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.நேரு, பி.ரமேஷ், செங்கல்பட்டு செயற்குழு உறுப்பினர்கள் ஜி.மோகனன், கே.வாசுதேவன்,  மருத்துவர் ஆர்.அம்சவல்லி, ஆவின் துணை பொது மேலாளர் கே.முருகன், சிக்கராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி வைதீஸ்வரன், மாதர் சங்க துணைத்தலைவர் டி.பிரேமா, பூவிருந்தவல்லி நகரச் செயலாளர் கே.பாரி ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.