districts

img

பூட்டியே கிடக்கும் பெண்கள் கழிப்பறை

கள்ளக்குறிச்சி, செப்.1- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், பங்காரம் கிராமத்தில் பெண்கள் கழிவறை செயல்படாத நிலையில் இருக்கின்றது. கடந்த 2008 ஆம் ஆண்டு மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் செலவில் பங்காரம் கிராமத்தில் பெண்களுக்கு கழிவறை கட்டப்பட்டது. ஆனால் சில வருடங்களாகவே போதிய பராமரிப்பு இல்லாததால் பெண்கள் கழிவறையை பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. இதனால் பெண்கள் காலைக்கடன் முடிப்பதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.  கள்ளக்குறிச்சி, சின்னசேலம், பங்காரம், கனியாமூர், தொட்டியம், இந்திலி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் திறந்த வெளியில் பெண்கள் காலை கடன் முடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். பெண்களின் சிரமத்தை புரிந்து கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். பூட்டி இருக்கக்கூடிய கழிவறையை சுத்தம் செய்து பெண்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.