கள்ளக்குறிச்சி, ஏப். 5- கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் அமைந்துள் ளது கூத்தாண்டவர் கோயில். இங்கு வருகிற 18 ஆம் தேதி முதல் சித்திரை பெருவிழா உற்சவம் தொடங்கி மே 5 ஆம் தேதி வரை நடைபெறு கிறது. இத்திருவிழாவிற்கு, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடு களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கா னோர் வந்து செல்வார்கள். இதை யடுத்து, விழாவிற்கு வருபவர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமை யில் அனைத்து துறை அலுவலர்க ளுடன் ஆலோசனைக் கூட்டம் புதனன்று (ஏப். 5) நடைபெற்றது. கண்காணிப்பு கேமராக்கள், வாகன தடுப்பு கட்டைகள், இரு சக்கர மற்றும் பேருந்துகள் நிறுத்துமிடம், பாதுகாப்பு பணிக்கு கூடுதல் காவலர்களை நியமித்தல், போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணை யர் சிவாகரன், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி ஆகி யோர் கலந்து கொண்டனர்.