கள்ளக்குறிச்சி அருகே உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ். கல்லூரியின் ஆண்டு விழா, விளையாட்டு மற்றும் விருது வழங்கும் முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் க.மகுடமுடி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். எழுத்தாளர் மற்றும் திரைப்பட நடிகர் பப்லு பிரித்திவிராஜ் ஆண்டு மலரை வெளியிட்டார். விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.கோவிந்தராஜூ விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார். இதில் தாளாளர் ஜி.எஸ்.குமார், செயலாளர் கோவிந்தராஜூ, பொருளாளர் தமிழ்மணி, துணை முதல்வர் ஜான்விக்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.