கரூர், டிச.24- கரூர் மாவட்டம், புகளூர் டிஎன்பிஎல் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிப்பவர் குகன் கார்த்திக்கேஸ்வரன். இவரது தந்தை ஆனந்த ஐயப்பன், புகளூர் காகித ஆலை யில் பணிபுரிந்து வருகிறார். எட்டு வயதே நிரம்பிய குகன் கார்த்திக்கேஸ்வரன் சிலம்பம் தற்காப்பு கலையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவரது சாதனைகளை பாராட்டி ஹரியானாவிலுள்ள மேஜிக் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் மேஜிக் அன்ட் ஆர்ட் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டரேட் (மதிப்புறு முனைவர்) விருது வழங்கி பாராட்டியுள்ளது. மாணவர் குகன் கார்த்திக்கேஸ்வ ரன் சிலம்பம் மற்றும் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் மாவட்ட, மண்டல, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 8 தங்கம், 2 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங் களை வென்றுள்ளார். கெளரவ டாக்ட்ரேட் விருது பெற்ற மாண வரை பாரதம் மார்ஷியல் ஆர்ட்ஸ் சிலம்பம் அகாடமி நிறுவனர் கிருஷ்ணராஜ், கரூர் அமெச்சூர் சிலம்பம் அகாடமி செயலாளர் செளந்தரராஜன் மற்றும் பொது மக்கள் பாராட்டினர்.