districts

img

மாணவர்கள் நன்றாக படித்து வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் மிதிவண்டி வழங்கும் விழாவில் எம்எல்ஏ அறிவுரை

கரூர், செப்.16 - தமிழ்நாடு அரசு வழங்கும் விலை யில்லா மிதிவண்டி வழங்கும் விழா  உப்பிடமங்கலம், ஜெகதாபி, பொரணி,  வெள்ளியணை அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், வெள்ளையனை மகளிர்  மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.  கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் சட்டமன்ற உறுப்பினர் கே.சிவ காமசுந்தரி 817 மாணவ, மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கி சிறப்புரையாற்றினர்.  அவர் பேசுகையில், “மாணவ, மாண விகள் நன்றாக படித்து, வாழ்க்கையில்  உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் கல்வியில் இடைநிறுத்தம் இருக்க கூடாது. சிறுவயதில் திருமணம் செய்யக் கூடாது. வாழ்க்கையில் அவர்கள் படித்து, தன் சுய சிந்தனையில் வாழ வேண்டும். எதிர்காலத்தை நல்ல முறை யில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், கல்வி  கற்பதற்காக விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, பேருந்தில் இலவச பயணம், காலை-மதிய உணவுத் திட்டம்  உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனை பயன் படுத்தி மாணவிகள் நன்றாக படித்து, ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பு, மரி யாதையை கொடுத்து தங்களது வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் விஜேந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் எஸ்.தீனதயாளன் (ஜெக தாபி), இரா.கி.சாந்தி (வெள்ளியணை), தாந்தோணி ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.ரகுநாதன் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

;