கரூர், அக்.16 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் கரூர் மாவட்ட 4-வது மாநாடு கரூர் உழவர்சந்தை அருகில் உள்ள தனி யார் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. மாநாட்டிற்கு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.ஹோச்சுமின் தலைமை வகித்தார். வரவேற்பு குழு தலைவர் தண்டபாணி வரவேற்று பேசி னார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநில துணைத் தலைவர் பி.பி.பழனிசாமி சிறப்புரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் பி.ராஜூ வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் சரவணன் வரவு- செலவு அறிக்கையையும் முன்வைத்து பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் மா.ஜோதி பாசு, சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் சி.முருகேசன், விச மாவட்ட தலைவர் கே.கந்தசாமி, விதொச மாவட்ட செயலாளர் இரா.முத்துச்செல்வன், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ப.சரவணன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பார்த்திபன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கணேசன், தந்தை பெரியார் திராவிட கழக தனபால், துரைமுருகன் உள்ளிட்டோர் மாநாட்டில் பேசினர். வரவேற்பு குழு பொருளாளர் கிருஷ் ணமூர்த்தி நன்றி கூறினார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக பி.ராம மூர்த்தி, செயலாளராக எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளராக வழக்கறிஞர் பி.சரவணன், துணைத் தலைவர்களாக பி.ராஜு, ஆர்.ஹோச்சுமின், டி.இளங் கோவன், உதவி செயலாளர்களாக ஜி.பார்த்திபன், ஒ.கே.கண்ணதாசன், எஸ்.கணேசன் உட்பட 27 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில் சாதி ஆணவப் படு கொலைகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த சாதி ஆணவப் படுகொலை வழக்குகளில், சாதி ஆதிக்க வெறியர்கள் பண பலத்தையும், அரசியல் செல்வாக்கை யும் பயன்படுத்தி மூடி மறைத்து தப்பிக்கக் கூடிய நிலைமையும் உள்ளது. இதற்கு துணைபோகும் சில ரால், சாதி ஆணவப் படுகொலைகள் மூடி மறைக்கப்படுகின்றன. எனவே, சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த சிறப்பு தனிச் சட்டம் இயற்றிட வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பட்டியல் வகுப்பு மக்களின் பொருளா தாரத்தை மேம்படுத்த கூடிய, வகை யில் நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் தற்போது சாதி ஆதிக்க வெறி யர்களின் கைகளில் சிக்கியுள்ளது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பட்டியல் வகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு, பட்டியல் வகுப்பு மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் நிலவக் கூடிய சாதியப் பாகுபாட்டைக் களைந்திட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்க டைகளை சுத்தம் செய்வதற்கு, மனிதர் களை பயன்படுத்தக் கூடிய நிலை நீடித்து வருகிறது. அரசு இதில் உரிய கவனம் செலுத்தி பாதாள சாக்கடை மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
பாதாளச் சாக்கடை பணி களில் இயந்திரங்களை (ரோபோக் களை) பயன்படுத்த வேண்டும். அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக் கீடு அளிப்பது போல, தனியார் நிறுவன வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பழங்குடியின மக்களுக்கு எதிரான பல்வேறு தீண்டாமை கொடுமைகள் தொடர்ச்சியாக நிகழ்கின்றன. இந்த தீண்டாமை கொடுமைகளைக் களைந் திட, சம்பந்தப்பட்ட சட்டங்களை அனைத்து அரசுத் துறைகளிலும் கட்டா யம் அமல்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்ட நிதியினை, கரூர் மாவட்டத்தில் பட்டியல் வகுப்பு மக்களுக்கான வாழ்விட மேம்பாட்டிற் கும், கல்வி வேலைவாய்ப்பிற்கும் பயன்படுத்த வேண்டும். ஆனால், பட்டியல் வகுப்பு அல்லாத பகுதிகளில் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை கரூர் மாவட்ட நிர்வா கம் உடனடியாக கவனத்தில் எடுத்து பட்டியல் வகுப்பு மக்களின் வாழ்விட மேம் பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.