கரூர், நவ.2 - உள்ளாட்சி தின விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் பாலவிடுதி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக் கப் பள்ளி அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு பாலவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சி.சக்திவேல் வர வேற்றார். ஊராட்சி செயலர் வி.சுந்தர் ராஜன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது ஊராட்சி நிர்வாகத்தின் தலையாய பணியாக கருதி பணியாற்றி வருகிறோம் என்று பாலவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ராஜேந்திரன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், “பாலவிடுதி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் மக்க ளின் வாழ்வாதாரமாக உள்ள நூறு நாள் வேலையை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர், மாவட்ட அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நட வடிக்கை எடுக்கும். கிராமப் புறங்களில் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தன்னி றைவு பெற்ற சிறந்த ஊராட்சியாக மாற்று வதையே நோக்கமாக கொண்டு ஊராட்சி யில் பணிகள் நடக்கின்றன. பாலவிடுதி ஊராட்சியில் குழந்தை திருமணங்களை முற்றிலுமாக தடுத்துவிடும் வகையில், பெற்றோர்களுக்கு சம்பந்தப்பட்ட அலு வலர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண் கல்வியின் அவசியத்தை குறித்து பெற்றோர்களுக்கும், மாணவி களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த பல கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறோம். கிரா மங்கள்தோறும் கல்வியில் இடைநிற்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஊராட்சி மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கிராமங் கள் தோறும் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். டெங்கு, மலேரியா, கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளதா அல்லது பரவா மல் தடுத்திட கண்காணிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் ஆரோக்கி யத்தின் மீது ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. கிரா மங்கள் தோறும் கொசு ஒழிப்புக்காக புகை வண்டி மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளித் திடவும், வீடுகள்தோறும் சென்று கொசு உற்பத்தியாவதை தடுத்திடவும் விழிப்பு ணர்வு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்த லின்படி வடகிழக்கு பருவமழை காலத்தில் நீர்நிலைகள், குட்டைகளில் தண்ணீரை தேக்கி வைப்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் உயர்வ தற்கு பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. பொதுமக்களின் அடிப்படை பிரச்சனை களை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து, தன்னை நேரில் சந்தித்து பொது மக்கள் குறைகளை கூறலாம். அவற்றை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் தயாராக உள் ளது” என்றார். கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கணக் கெடுப்பு, மகளிர் சுய உதவிக்குழு உரு வாக்குதல், சிறப்பாக செயல்படுவர்கள், ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிபவர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஊராட்சிகளில் சிறப்பாக பணியாற்ற நடவடிக்கை எடுத்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.