கடலூர், செப். 8- திருநங்கைகளிடம் காவல்துறையின் அணுகு முறை மனிதநேயத்தோடு இருக்க வேண்டும் என்று மாதர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாட்டு கடலூரில் இம்மாத இறுதியில் நடை பெறுவதையொட்டி ‘திரு நங்கைகள் சந்திக்கும் வாழ்வியல் சவால்களும் தீர்வுகளும்’என்ற தலைப் பில் விவாத அரங்கம் காப்பீட்டுக் கழக ஊழி யர் சங்கம் சார்பில் நடை பெற்றது இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் கோட்ட இணைச் செயலாளர் ஜி.வைத்தி லிங்கம் தலைமை தாங்கி னார். குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் பி.வெங்கடேசன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். ஜி.ரமேஷ் பாபு, தமிழ் நாடு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்க மாநிலச் செய லாளர் ஆர்.மனோகரன், கடலூர் மாநகர அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் எஸ்.என்.கே.ரவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விவாத அரங்கத்தில் திரு நங்கைகள் தங்களுடைய அன்றாட வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சனை களையும், சந்திக்கும் சவால்களையும், கல்வி, வேலை வாய்ப்பு, இருப்பி டம், பொது போக்குவரத்து மற்றும் காவல்துறை போன்ற இடங்களில் சந்திக்கும் சமூக பிரச்சனை களையும் எடுத்துக் கூறினர். இதில் கலந்து கொண்டு மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலை வர் சுதா சுந்தர்ராமன் பேசு கையில், “அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்து திரு நங்கைகளிடம் அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், மருத்துவர்கள், பெற்றோர் களே திருநங்கைகள் குறித்து புரிதல் இல்லாமல் அவர்களை வெறுத்து ஒதுக்கும் நிலை உள்ளது.
இதனை எதிர்த்து போராட அவர்கள் முன் வர வேண்டும். உங்களுக்கு உறுதுணையாக மாதர் சங்கம் எப்பொழுதும் உங்களோடு இருக்கும்” என்றார். 75ஆவது சுதந்திர தினத்தை விமர்சையாக கொண்டாடுகின்ற இந்த தேசத்தில் காவி வண்ணம் மட்டும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப் படுகிறது. ஆனால் வான வில்லின் ஏழு நிறங்களும் கொண்டாடப்பட வேண்டும். அப்படி ஒரு மனநிலை வந்தால் திருநங்கைகள் வாழ்வு மேம்படும். குடும்ப அமைப்புகளே தங்க ளுடைய பிள்ளைகளை உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களை கண்டு ஏற்றுக் கொள்ளாதது வேதனை யளிக்கிறது. சாதி மாறி திரு மணம் செய்து கொண்டால், கொலை செய்யப்படு கின்ற சூழல் உள்ளது. அனைவரும் அமைப் பாய் திரண்டு இதற்கு எதி ராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். திருநங்கைகள் தங்க ளுடைய அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளான கல்வி, இருப்பிடம், காவல்துறை யின் ஆணவப் போக்கு ஆகியவை குறித்து மாநாட்டில் விவாதித்து திரு நங்கைகளுக்கான எதிர்கால இயக்கங்களை திட்ட மிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சகோதரன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீத்தல் நாயக்கும் பேசினார். மாதர் சங்கத்தின் கிளைச் செயலாளர் சாந்தகுமாரி நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
திருநங்கைகளிடம் காவல்துறை மனிதநேயத் தோடு அணுக வேண்டும், திருநங்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யில் அரசு ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும், செயல்படாமல் தேக்க நிலையில் உள்ள திருநங்கைகளின் நல வாரியங்களை உடனடியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.