districts

img

திருப்பாதிரிப்புலியூரில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் விஷ்ணு பிரசாத் எம்பியிடம் சிபிஎம் மனு

கடலூர், ஜூன் 15- திருப்பாதிரிப்புலியூரில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கடலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எம்.பி. விஷ்ணு பிரசாத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது:- கடலூர் மாவட்டத்தின் தலைநகரம் திருப்பாதிரிப் புலியூர் ரயில் நிலையத்தை கடலூர்-திருப்பாப்புலியூர் என பெயர் மாற்றம் செய்ய கடலூர் மாநகராட்சி தீர்மா னம் நிறைவேற்றி உள்ள நிலையில் ரயில்வே துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம்-தாம்பரம் ரயில்கள் கடலூர் துறை முகம் வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே திருச்சி கோட்டம் ரயில்வே போர்டுக்கு முன்மொழிந்து உள்ளதை ரயில்வே வாரியம் ஒப்புதல் தர வேண்டும். சேலம்-விருதாச்சலம் கடலூர் துறைமுகம் வரை வரும் ரயில் கடலூர்- திருப் பாப்புலியூர் ரயில் நிலையத் திற்கு நீட்டிப்பு செய்திட  வேண்டும்.மயிலாடுதுறையி லிருந்து கோவை, மைசூர்  செல்லும் ரயில்கள் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும்.

திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை டிக்கெட் முன்பதிவு வசதி செய்திட வேண்டும். ரயில்வே புறக்காவல் நிலை யங்களில் இரவு நேரத்தில் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும், திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் மன்னார் குடி மஹால் விரைவு வண்டி,  இரவு நேரத்தில் உழவன்,  காரைக்கால், ராமேஸ்வ ரம், காசி தமிழ் சங்கம்  எக்ஸ்பிரஸ்  கன்னியாக் குமரி - வாரணாசி ஆகிய ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

சென்னை - காரைக்குடி புதிய ரயில் விரைந்து இயக்க வேண்டும். விழுப்பு ரம் - கடலூர்-மயிலாடுதுறை-திருச்சி இரண்டாவது ரயில் பாதையை அமைக்க நிதியை ஒதுக்கீடு செய்து  பணியை துவங்க வேண்டும்.  கடலூர்- புதுவை- சென்னை  இருப்பு பாதைத் திட்டத்தை நிறைவேற்ற கூடுதல் நிதி  ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்திருந்தனர்.