districts

img

சமூக சீர்கேடுகளை எதிர்த்து முன்னேறுவோம்!

கடலூர், ஜூலை 28- கவிஞர் தமிழ்ஒளியின் சிந்தனை யின்படி சமூக சீர்கேடுகளை எதிர்த்து முன்னேறுவோம் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் அறை கூவல் விடுத்தார்.

கட்சியின் கடலூர் மாவட்ட குழுவின் சார்பில் சனிக்கிழமை (ஜூலை 27) நடைபெற்ற கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு கருத்த ரங்கில் அவர் பேசியதாவது:

தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பாக கொண்டாடவேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில்சந்தித்து கடந்த ஆண்டு கோரிக்கை வைத்தோம்.  அதேபோல் தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா குழு அமைத்து முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.  அதன் படி கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு தொடக்க விழாவை தமிழக அரசு சென்னையில் நடத்தியது. நிறைவு விழாவை வடலூரில் நடத்தியுள்ளது பாராட்டத்தக்கது.  

உலகமே பேசும் போராட்டம்

41 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கவிஞர் பல்வேறு பரிமாணங்களை கொண்டுள்ளார். அவரை பாராட்டுவது நமது கடமை.தமிழகத்தில் சாதிய கொடுமை, தீண்டாமை கொடுமை இருந்துள்ளது.  கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில்  நந்தனார் நடராஜர் ஆலயத்திற்குள்ளேயே நுழைகின்ற போராட்டம் தான் உலகமே பேசும் போராட்டமாக மாறியது.

ஏன் சிதம்பரத்தில் இந்த சம்பவம் நடக்க வேண்டும்

 8 மற்றும் 9ம்  நூற்றாண்டில் நந்த னார் வாழ்ந்தார். 15 நூற்றாண்டு களுக்கு முன்பே தீண்டாமை கொடுமையை எதிர்த்து போராடிய மண் கடலூர் மாவட்டம்.  200 ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்தவர் வள்ள லார். அவருக்கு வடலூரில் சர்வதேச மையம் அரசு சார்பாக அமை க்கப்படுகிறது. வள்ளலார் போராட்டம் தொடங்கிய மண்ணும் சிதம்பரம் தான். அங்கு தீட்சிதர்களின் ஆதிக் கத்தை எதிர்த்து போராடியவர். அதனை தாக்கு பிடிக்க முடியாமல் தான் வடலூருக்கு வந்தார். தீண்டா மையை எதிர்த்தும், பிராமணிய ஆதிக்கத்தை எதிர்த்தும் மிகப்பெரிய போராட்டம் நடத்திய மண்ணாக கடலூர் மாவட்டம் உள்ளது. 

கடவுளை வழிபட்டவராக வள்ள லார் அறியப்பட்டாலும், அவருடைய 6 வது திருமுறையில் கடவுளை நம்பக்கூடிய அளவிற்கு அவர் இல்லை. அவருடைய ஆறாவது திரு முறையில் முற்போக்கு கருத்துக் களை சொல்லி உள்ளார். அதன் அடிப் படையிலேயே கவிஞர் கவிஞர் தமிழ் ஒளியையும் பார்க்கின்றோம்.

ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய்..

கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழாவை ஏன் கொண்டாடுகிறோம் என்றால், இந்த மண்ணில் பிறந்து, பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்து வாழ்ந்து, ஒடுக்கப்பட்ட வர்களுக்காக குரல் கொடுத்தவர்.  நந்தனாரும், வள்ளலாரும் நடத்திய போராட்டங்கள் சாதாரணமானவை அல்ல. நந்தனாரின் போராட்டம் கடை சியில் அவருடைய உயிரையே பறித்தது. அந்த அளவிற்கு சாதிய கட்ட மைப்பு உள்ள சமூகம் அன்று இருந்தது. 

முதலில் கேரளம்தான்..

கல்வியில் முன்னேற்றம் கண்டால் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும் என்ற நோக்கில் சக ஜானந்தா கல்வி நிலையத்தை தொடங்கி நடத்தினார்.  அவரின் வழி யில் இளையபெருமாள் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் 1969ல் தீண் டாமை ஒழிப்பு கமிட்டியின் தலை வராக இருந்து பல்வேறு பரிந்துரை களை அரசுக்கு வழங்கினார்.  அதன் அடிப்படையில் தான் அனைத்து சாதி யினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் முதலில் கேரளம் தான் அனைத்து சாதி யினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டத்தை கொண்டு வந்து அமல் படுத்தியது.  

எதற்கும் அஞ்சாதவர்!

கவிஞர் தமிழ் ஒளியை பொறுத்த வரை அவருக்கு சரி என்று படுவதை யும், தவறு என்று படுவதையும் யார் எவர் என்று பார்க்காமல் விமர்சனத்தை முன்வைப்பவர். பாரதிதாசனை தன்னு டைய ஆசான் என்று ஏற்றுக் கொண்ட அவர் அவருடைய கருத்தில் முரண் பட்ட பிறகு அவரைப் பிரிந்து வெளியே வந்தார். பொதுவுடமை இயக்க தலைவர் ஜீவாவோடும், புதுமைப் பித்தனோடும் நட்போடு இருந்தவர். கருத்து வேறுபடும் போது முரண் பட்டார்.
முற்போக்கு கருத்துகளை நாம் ஒருவர்  எழுதி என்னவாக போகிறது என்று யோசிக்காமல், சிறு துளி பெரு வெள்ளம் போல் பொது உடமையே தீர்வு என்று வாழ்ந்தவர். முதலா ளித்துவ கட்டமைப்பின் அனைத்து அம்சங்களையும் எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் தான் உண்மையான கம்யூனிஸ்டுகள். முதலாளித்துவம் ஆழமான வேர் பிடிப்போடு உள்ளது. நீண்ட நெடிய போராட்டத்தின் மூலம் தான் அதனை அழிக்க முடியும். சமூகத்தின் நீண்ட பயணத்தில் இது ஒரு கட்டம்.


கடந்த நூற்றாண்டில் தமிழ் நாட்டில் விடுதலைப் போராட்டம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட் டம்,  தனித் தமிழ்நாடு இயக்கம், நீதிக் கட்சியின் தோற்றம், சுயமரியாதை, பகுத்தறிவு இயக்கங்கள் உள்ளிட்ட அரசியல் கருத்தியல் களமாக தமிழ்நாடு இருந்தது. எல்லா கருத்து களையும் உள்வாங்கி சரியான சிந்தனை நுட்பத்தில் கருத்தியல் போராட்டங்களை நடத்தியவர் தான் தமிழ் ஒளி. குறிப்பாக தொழிலாளி வர்க்கம், உழைப்பாளி வர்க்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். சாதி யத்திற்கு எதிராக, பெண் அடிமைக்கு எதிராக, சமூக சீர்கேடுகளை எதிர்த்த பயணத்தை தீவிரமாக முன்னெடுத்து செல்வது தான் கவிஞர் தமிழ் ஒளியின் சிந்தனை. அதனை நிறைவேற்று வோம்,

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன்  என்று தெரிவித்தார்.

மாவட்ட செயலாளர்  கோ.மாத வன் தலைமையில் நடைபெற்ற கருத் தரங்கில்  மாவட்ட குழு உறுப்பி னர்கள் எம்.பி.தண்டபாணி, எம்.சிவா னந்தம், பி.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத்  வரவேற்றார். மத்திய குழு உறுப்பி னர் உ.வாசுகி, மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, புதுவை பிர தேச செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமச் சந்திரன் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், வி.உதயகுமார், பி.கருப்பையன், வி.சுப்பராயன், ஆர்.ராமச்சந்திரன், எஸ்.திருஅரசு, ஜி.ஆர்.ரவிச்சந்திரன்,  பி.தேன்மொழி, ஜே.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. 

கவிஞர் தமிழ் ஒளியின் உறவி னர் எஸ்.ராமச்சந்திரன், சங்கர் ஆகி யோருக்கு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சால்வை அணிவித்து  கவுரவித்தார். ஒன்றிய செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம் நன்றி கூறினார்.