கடலூர்,ஜூலை 9- கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு பள்ளி, கல்லூரிகள் விடுதிகள் என மொத்தம் 60 விடுதிகள் உள்ளன.மேற்கண்ட விடுதிகளில் இந்து ஆதிதிராவிடர் வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் 85 விழுக்காடு, பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட , சீர்மரபினர்கள் 10 விழுக்காடு, இதர வகுப்பினர் 5 விழுக்காடு சேர்ந்து பயனடையலாம். இதற்கு மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதியிலிருந்து மாணவர் குடியிருப்பு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு அதில் கல்வி நிறுவனத்தின் சான்றொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். அனைத்து விடுதிகளிலும் மாணாக்கரின் சேர்க்கை புதிய விண்ணப்பப் படிவம் மூலமாகவும் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.ஒரு விடுதிக்கு தலா 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளை விடுதியில் சேர்த்திடலாம். மாணவர்களின் மற்றும் கல்வி உதவித் தொகைக்கு வழங்கப்பட்ட ஆகியவை குறிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு விடுதிகளில் தரமான உணவு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் வழங்கப்படுகிறது. மேலும், போர்வை, தட்டு டம்ளர் ஆகியவையும் வழங்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்திலுள்ள மாணவர்கள் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர்ந்து பயன்பெறலாம். 2022 - 2023 -ம் ஆண்டிற்கான விடுதியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் பள்ளி மற்றும் கல்லூரி விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் ஆதார் அட்டை நகல், மற்றும் மாணவ , மாணவியர்களின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை இணைத்து விடுதி காப்பாளர் , காப்பாளினி வசம் கீழ்க்காணும் தேதிகளுக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாளாக பள்ளிக்கு ஜூலை 18ஆம் தேதியும், கல்லூரிக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.