கடலூர், செப்.6- கடலூர், ஆதிதிராவிடர் மாணவர் விடுதி யில் மாணவர்களுக்கு கூடுதல் சேர்க்கை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கோ. மாதவன் கடிதம் ஒன்றை அனுப்பி யிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:- கடலூர் நகரில் இயங்கிவரும் ஆதி திராவிடர் நலத்துறையின் கல்லூரி மாணவர் விடுதியில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 80 பேர் தங்கிப் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள். நடப்புக் கல்வியாண்டில் (2022-2023) முதலாம் ஆண்டிற்கு 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இவர்கள் கடலூர், விழுப்பும், கள்ளக் கறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் வழங்கப்படும் 50 மாண வர்களுக்கான கூடுதல் இடங்கள் இந்த முறை வழங்கவில்லை. இதனால், மாண வர்களின் கல்வி தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விண்ணப்பம் வழங்கி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.