districts

உதகை: கண் அறுவை சிகிச்சை அரங்கை திறக்க கோரிக்கை

உதகை, ஜன.13- உதகை அரசு தலைமை  மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை அரங்கை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

. இதுகுறித்து கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூ ழல் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் சிவசுப்பிரமணியம்,  மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்கு னர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியி ருப்பதாவது, நீலகிரி மாவட்டம், உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கண் சம்பந்தமான நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

 இதனால் ஏழை,  எளிய மக்கள் ஏராளமானோர் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து பயன்பெற்று வந்தனர்.  இந்நிலையில், கடந்த மார்ச் 2020 முதல் கொரோனா  தொற்று காரணமாக கண் அறுவை சிகிச்சை அரங்கு  மூடப்பட்டு கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றப் பட்டது. இதன்காரணமாக, கடந்த 10 மாதங்களாக கண்  சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற முடி யாமல் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் அதிகளவு செலவு ஏற்படுவதால் செய்வதின்றி நிற்கின்றனர்.  எனவே, தற்போது அறிவிக் கப்பட்ட தளர்வுகள் அடிப்படையில் மாவட்ட  தலைமை மருத்துவமனையில் உள்ள கண் சிகிச்சை அரங்கினையும்,  வார்டினையும் திறந்து கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று  அம்மனுவில் கூறப் பட்டுள்ளது.