districts

img

விவசாயிகளைத் தாக்கும் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆவேசம்

ஈரோடு, நவ. 29- வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதி ராக, தலைநகர் தில்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் மத்திய அரசை கண்டித்து ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு சமீபத் தில் கொண்டு வந்த வேளாண் விரோத சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழு வதும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகு தியாக, தலைநகர் தில்லியில் மாபெரும் பேரணியுடன் விவசாயிகள் எழுச்சிமிக்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய மோடி அரசு போரா டும் விவசாயிகள் மீது கொடூர தாக்கு தலை நடத்தி வருகிறது.

இதனைக் கண் டித்தும், போராடும் விவசாயிகளுக்கு ஆத ரவாகவும், மூன்று வேளாண் சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக் கோரியும் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், நசியனூரில் நடை பெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத் தில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ப.மாரிமுத்து, ஆர்.கோமதி, ஆர்.  விஜயராகவன், ஏ.எம் முனுசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் பி.லலிதா, உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து மத்திய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

;