அரியலூர், பிப். 4 - திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ ரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டுதலின் படி, செந்துறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நி லைப் பள்ளியில் செல்வவிநாயகம் முன்னி லையில் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக் கும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கும் இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் மணி கண்டன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) சிவனேசன் ஆகியோர் மூலம் வங்கி கணக்கு எண், ஓடிபி, கேஒய்சி, சிவிவி, பின் நம்பர், ஏடிஎம், கிரெடிட் கார்டு, இணைய பரிவர்த்தனை, ஆதார் கார்டு, பான் கார்டு, அடையாள அட்டை, ரேசன் அட்டை, உரிமம், செயலிகள், லிங்க், ஹேக்கிங், வாடிக் கையாளர் சேவை, மார்ஃபிங், சமூக வலை தளங்களான முகநூல், புலனம், டெலி கிராம், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், தனிநபர் அமைப்பு, கடவுச் சொல், விபரப் பூட்டு, Juice Jacking, Free WiFi, Fake website, cell phone t ower, Deposit, லோன், Double money, வேலை, பரிசு, விலை, ஆன்லைன் வர்த்தகம், இமெயில், எஸ்எம்எஸ், Online Threatening, Share market, Scratch card, QR Code, Sim swapping, Corona/Omicron Fake call, Vishing/Phishing, Tower fraud, Online Games, Lottery, Nude video call threatening போன்ற சைபர் குற்றங்கள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இணையதளத்தில் குற்றவாளி கள் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 155260-க்கு உடனடி யாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் அளிப்பது என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.