court

img

கொலீஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளை நுழைப்பது நீதித்துறையின் சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி!

புதுதில்லி, ஜன.18- கொலீஜியம் அமைப்பில், ஒன்றிய அர சின் பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும்  என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிற்கு, சட்டத்துறை அமைச்  சர் கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதியிருப்பதற்கு, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AILU)  கண்டனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அமைச்சரின் இந்த கடிதமானது, நீதித்துறை விவகாரங்களில் தலையிட்டு,  அதன் சுதந்திரத்தைப் பறிக்கும் முயற்சி என்  றும் அது குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.வி.  சுரேந்திர நாத் அறிக்கை ஒன்றை வெளியிட்  டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது

உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்கும், நியமனம் செய்வதற்கும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நிய மிப்பதற்கும் அரசாங்கத்தின் பிரதிநிதித்து வத்துடன் கூடிய தேடல் மற்றும் மதிப்பீட்டுக் குழு தேவை என்று கிரண் ரிஜிஜு வலி யுறுத்துகிறார். இது நீதித்துறையின் சுதந்தி ரத்தில் தலையிட்டு, நீதித்துறையின் உறுதி யைக் குலைப்பதற்கான புதிய முயற்சி ஆகும். தேசிய நீதிபதிகள் நியமன ஆணை யத்தை (National Judicial Appointments Commission- 2014) உருவாக்குவதற்கான அரசியலமைப்புத் திருத்தம் (99th Constitutional Amendment Act) மற்றும் தேசிய நீதிபதிகள் நியமனக் கமிஷன் சட்டத்தை ரத்து செய்து, உச்ச நீதிமன்ற அர சியல் சாசன அமர்வில்- பெரும்பான்மையாக நான்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.  அவ்வாறு இருக்கையில், நீதித்துறை யின் சுதந்திரத்தை மீறாத வகையில், அரசி யலமைப்பு அந்தஸ்து கொண்ட, முழுமை யான, சுதந்திரமான தன்னாட்சி அமைப்புக் கான புதிய அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வராத ஒன்றிய அரசு, இப்போது  கொலீஜியத்திற்குள் பின்வாசல் வழியாக  நுழையவும், நீதித்துறையின் விவகாரங்க ளில் தலையிடவும் முயற்சிக்கிறது. அகிய  இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் இத்தகைய  முயற்சிகளை கண்டிக்கிறது. வலுவான முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறது.

கொலீஜியம் அமைப்புக்கு எதிரான அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் விமர்சனம், நிர்வாக அதிகாரிகள், நீதித்துறை  அதிகாரங்களை மீறுவதற்கும், நீதித்துறை யின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கும் உதவு வது அல்ல. எங்கள் விமர்சனம் நீதித்துறை யின் சுதந்திரத்தை பாதுகாக்கவும் மேம் படுத்தவும் மற்றும் அரசியலமைப்பு ஆணை களின்படி ‘இந்திய மக்களாகிய நாம்’  பொறுப்புக்கூறும் வகையிலான ஆக்கப் பூர்வமான ஒன்றாகும்.  எங்களின் கோரிக்கையானது, நீதித் துறை முழுக்க முழுக்க சுதந்திரமான தன்  னாட்சி அரசியலமைப்பு நிறுவனமாக நடை போடுவதற்கு ஆனதாகும். அரசு நிர்வா கத்தின் தலையீட்டையும், நீதித்துறையின் சுதந்திரத்தை மீறப்படுவதையும் தடுப்ப தாகும். 

ஆனால், அரசாங்கத்தின் பிரதிநிதித்து வத்துடன் கூடிய தேடல் மற்றும் மதிப்பீட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற தற்போ தைய சட்ட அமைச்சரின் முன்மொழிவு ‘சுதந்திரமான பொறுப்பு மிக்க நீதித்துறை என்ற கருத்துக்கு முற்றிலும் எதிரானது. நீதித்துறைக்கு எதிராக பொதுமக்களின் கருத்தைத் திரட்டுவதும், நீதித்துறை விவ காரங்களில் நிர்வாகத் தலையீட்டிற்கு ஒப்பு தல் வழங்குவதும், அதை அரசு நிர்வா கத்திற்கு அடிபணியச் செய்வதும் சங்பரி வார் ஆட்சியின் நன்கு திட்டமிடப்பட்ட சூழ்ச்சி யின் ஒரு பகுதியாகும். சட்ட அமைச்சரின்  அண்மைக் கூச்சல்களில் இருந்து இது  தெளிவாகிறது. ரிஜிஜு மற்றும் ஆர்எஸ்எஸ்  அமைப்பினர் நீதித்துறை மறுஆய்வு அதி காரத்திற்கு எதிராக வைக்கும் விமர்சனங் கள், இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தும் ‘நாடாளுமன்றத்தின் மேன்மை’ ஆகியவற்றை, இந்தப் பின்னணி யிலிருந்தே புரிந்து கொள்ள வேண்டும். எனவே, அரசியலமைப்புச் சட்ட நிறுவன மான நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத்  தேர்வு செய்வதிலும், நியமனம் செய்வதி லும், அவர்களின் இடமாற்றத்திலும் அரசின் தலையீட்டை எளிதில் அனுமதிக்காத, முற்றி லும் சுதந்திரமான தன்னாட்சி அரசியல மைப்பு உருவாகும் வரை, கொலீ ஜியத்தை வலுப்படுத்துவதும், அதை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்பு ணர்வுடனும் ஆக்குவதுதான் காலத்தின் தேவை. மாறாக, எந்த வடிவத்தில் வரும்  அரசு நிர்வாகத் தலையீடும் வெறுக்கத்தக் கது. இவ்வாறு பி.வி. சுரேந்திர நாத் கூறி யுள்ளார்.

;