court

img

உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் திணறிய அமலாக்கத்துறை

முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை இது வரை உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை எனவும் முறையாகப் பதிலளிக்கவில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டம்.
  செந்தில் பாலாஜி வழக்கில் பெண்டிரைவில் இல்லாத ஆவணம் திடீரென சேர்க்கப்பட்டது ஏன்? பெண்டிரைவில் இந்த ஆவணம் அப்போது இல்லை எனக் கூறப்படுகிறதே இதற்கு அமலாக்கத்துறையின் பதில் என்ன? சாஃப்ட் பைல் ஆவணம் எங்கிருந்து வந்தது என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி.
அமலாக்கத்துறை குறிப்பிடும் பென்டிரைவில் ரூ.67 கோடி பரிவர்த்தனைக்கான ஆதாரம் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு வாதம்
நீதிபதிகள் கேள்வி கேட்டாலே எதிராகச் செயல்படுபவர்களாகக் கருதக் கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு.
நாங்கள் கேட்டது சாதாரண கேள்வி உங்களிடம் சுற்றிவளைக்காமல் நேரடியான சாதாரண பதிலை எதிர்பார்க்கிறோம்
செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள நாங்கள் தொடர்ந்து முயற்கிக்கிறோம் என்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தடயவியல் துறைக்கு அனுப்பட்டதா என உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்குச் சரமாரியாக கிடிக்குப்பிடி கேள்விகளை எழுப்பியது.
கடந்த 15 நிமிடங்களாக எங்கள் கேள்விக்குப் பதி தராமல் இருக்கிறீர்கள் என்று அமலாக்கத்துறை மீது உச்சநீதிமன்றம் காட்டம் .
நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஒன்றிய அரசின் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா திணறிய நிலையில்
உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க நாளை வரை அவகாசம் கேட்டுள்ளனர். எனவே வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.