court

img

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ அங்கீகரிக்க முடியாது

புதுதில்லி, பிப்.2-  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும்  எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய  வேண்டும் என்று தேர்தல்  ஆணையம் உச்சநீதிமன்றத் தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலை மையிலான அமர்வு முன்பு  கடந்த வாரம் அதிமுக இடைக்காலப் பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிசாமி  தரப்பில் தாக்கல் செய்த மனு வில்,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களது தரப்பில் தனியாக வேட்பா ளரை நிறுத்த விரும்புகி றோம். ஆனால், கட்சியின் இடைக்காலப் பொதுச் செய லாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப் பக்கூடிய வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல்  ஆணையம் ஏற்க மறுக்கி றது.எனவே இந்த விண்ணப் பத்தை அங்கீகரிக்க தேர் தல் ஆணையத்துக்கு உத்த ரவிட வேண்டும் என்று முறை யிடப்பட்டது.  இந்த வழக்கை  விசாரித்த உச்சநீதிமன்றம்,  இந்த மனு தொடர்பான விவ ரங்களை ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பகிர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தர விட்டது.

மேலும் மனு தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஓ.பன்னீர்  செல்வம் தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் பதில் மனு தாக் கல் செய்யப்பட்டது. அதில், “பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலை யில் இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது. மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து விவகாரங்களும் அடங்கியுள்ள நிலையில், இடைக்கால மனு என்பது  விசாரணைக்கு உகந்தது  அல்ல என்று தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 2  வியாழனன்று தேர்தல்  ஆணையம் உச்சநீதிமன்றத் தில் பதில் மனு தாக்கல் செய்  தது. அந்த மனுவில், அதி முக பொதுக்குழு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. ஜூலை 11 அன்று நடந்த அதிமுக பொதுக் குழு கூட்ட தீர்மா னத்தை தேர்தல் ஆணை யம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. பொதுக் குழு தீர்மானத்திற்கு எதி ராக வழக்கு தொடரப்பட்டுள் ளது. தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்ட விதமும்  கேள்விக்கு உள்ளாக்கப்பட் டுள்ளது. இரட்டை  இலை  சின்னம் குறித்து யாரும்  ஆட்சேபம் தெரிவிக்க வில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு மனுத்தாக்கல் செய்  யப்பட்டால் தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார். தற்  போதைய சூழலில் அதிமுக  இடைக்கால பொதுச்செய லாளராக எடப்பாடி பழனி சாமியை அங்கீகரிக்க முடி யாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

;