court

img

நினைத்த நேரத்தில், நினைத்த இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர முடியாது!

புதுதில்லி, மார்ச் 27- ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 50 இடங்கள் அளவிற்கெல்லாம் அனு மதி தர முடியாது என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கூறி யுள்ளது. மேலும், முழுமையாக பேர ணிக்கு தடை விதிக்கவில்லை என் றும் அதேநேரம் நினைத்த நேரம், நினைத்த இடங்களில் பேரணியை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணி வகுப்பை, 23 இடங்களில் சுற்றுச்சுவ ருடன் கூடிய மைதானத்திற்குள் நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை  உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து ஆர்எஸ்எஸ் மேல்முறையீடு செய்தது.  இதனை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகம்மது சபீக் ஆகி யோர் அடங்கிய சென்னை உயர் நீதி மன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், மூன்று தேதி களை தேர்வு செய்து காவல்துறை யிடம் விண்ணப்பிக்குமாறு ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும், அவற்றில் ஒரு  தேதியை தேர்வு செய்து அணி வகுப்பிற்கு அனுமதி  அளிக்குமாறு தமிழ்நாடு காவல் துறைக்கும் உத்தரவிட்டது.  இந்நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதி மன்  றம் அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு வைத் தாக்கல் செய்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 3 அன்று நீதிபதிகள் வி.  ராமசுப்ரமணியன் மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்  போது, தமிழ்நாடு அரசின் சார்பில்  மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி யும், ஆர்எஸ்எஸ் சார்பில் வழக்கறி ஞர் மகேஷ் ஜெத்மலானியும் ஆஜ ராகி வாதாடினர். பின்னர் மார்ச் 17 அன்றும் இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப் போது, தமிழ்நாடு அரசு தமது வாதத்தை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யலாம் என்று கூறி வழக்கை மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், திங்களன்று இவ்வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் முகுல் ரோத்கி ஆஜ ராகி வாதாடினார். அப்போது, தமிழ் நாட்டில் 50 இடங்களில் எல்லாம்  ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனு மதி தர முடியாது; முதற்கட்டமாக 5 இடங்களில்தான் அனுமதி தரமுடி யும்; பேரணிக்கு முழு தடைவிதிக்க வில்லை; அதேநேரத்தில், நினைத்த  இடத்தில் நினைத்த நேரத்தில் பேரணி நடத்த சட்டத்தில் இட மில்லை. ஆனால், உளவுத்துறை தாக்கல் செய்த அறிக்கைகளை கவ னத்தில் கொள்ளாமல் ஆர்எஸ்எஸ்  பேரணிக்கு சென்னை உயர்நீதி மன்றம் அனுமதித்து விட்டது” என்று தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ண குமார், மேனகா குருசுவாமி, மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் ஆஜராகி னர். அவர்கள், “ஆர்எஸ்எஸ் அணி வகுப்புத் தடைக்கு, பிஎப்ஐ அமைப்  பின் மீதான தடை காரணமாக காட்டப்படுகிறது; உண்மையில், பிஎப்ஐ அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை மீட்டெடுத்துள்ளது. பிஎப்ஐ தடைக்குப் பிறகு, சட்டம் - ஒழுங்கு பிரச்சனை நீடிக்கிறது என்பதற்கு மாநில அரசிடம் ஆதா ரம் இல்லை; எனவே, 19(1)(பி) பிரி வின் கீழ் ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாக கூடும் உரிமையை மறுக்க முடியாது” என்றார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

;