court

img

சாத்தான்குளம் கொலை வழக்கு... காவல் உதவி ஆய்வாளரின் ‘ரிட்’ மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்....

புதுதில்லி:
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தைச் சேர்ந்த வணிகர்களான  ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்  ஆகியோர் கடந்தாண்டு ஜூன் மாதத்தில்  சாத்தான்குளம் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். 

இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி போலீசாரும், பின்னர் சிபிஐயும்வழக்குப் பதிவு செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட சாத்தான்குளம் காவல்ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள்  பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், போலீசார் முத்துராஜ், செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், சமயதுரை ஆகியோரை போலீசார் கைதுசெய்து மதுரை மத்தியசிறையில் அடைத்தனர். இந்நிலையில் நீதிமன்ற காவலில்உள்ள ரகுகணேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தரிட் மனுவில், ‘நீதிமன்ற காவல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.  

இம்மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமையன்று உச்சநீதி மன்ற நீதிபதி கன்வீல்கர் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, ‘மனுதாரரின் ரிட் மனு விசாரணைக்கு ஏற்புடையது இல்லை. அதனால், இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஜாமீன் மேல்முறையீடு மனு மற்றும்6 மாதத்தில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில், இந்த மனுக்கள் பட்டி யலிடப்பட்டு விசாரணை நடத்தப்படும்’ என்று உத்தரவிடப்பட்டது.

;