court

img

ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பிற்காக திறக்க அனுமதிக்க முடியாது.... உச்சநீதிமன்றம் உத்தரவு

மதுரை:
ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்புப் பணிக்காக இடைக்காலமாக திறக்க உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்துவிடடது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம், துப்பாக்கிச் சூட்டில், 14 பலியானதால்  ஆலையை மூடுமாறு தமிழக அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று  உத்தரவிட்டனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்றும் கூறினர்.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால், வேதாந்தா நிறுவனம்  ஆலையை பராமரிப்பதற்காக இடைகாலமாக திறக்க உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. மேலும் வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும்  கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் இடைக்கால பராமரிப்பிற்காக திறக்க உத்தரவிடக் கோரும் வழக்கு வெள்ளியன்று நீதிபதி ரோஹிந்தன் நாரிமன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் வேதாந்தா நிறுவன கோரிக்கைகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக இடைகாலமாக திறக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கே.வி. விஸ்வநாதன், சி.எஸ்,வைத்தியநாதன் ஆகியோர், “,இந்த ஆலையால், நாட்டின் செல்வம் அழிக்கப்படுகிறது! குடிநீர் மாசுபடுகிறது! மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட  பிற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட்நிர்வாகம் சட்டத்தை மதிப்பதில்லை. மழைக்காலங் களில் ஆலையின் கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன.இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படு கின்றனர். இந்த ஆலையை ஒரு போதும் இயங்க அனுமதிக்க முடியாது என வாதிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;