court

img

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி... உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்....

புதுதில்லி;
நாடு முழுவதும் 18 வயதுக்கும் மேற்பட்டஅனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள்கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள், 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 3-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.இந்த வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின்சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட் டது. அந்த மனுவில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டதகுதி வாய்ந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுவருகிறது. இந்த இலக்கு நிச்சயமாக எட்டப்படும். இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.’’ எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ‘‘இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனம் மூலம்இரண்டு வகையான கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இதுவே போதுமானது.இதுமட்டுமின்றி மற்ற நாடுகளில் இருந்தும் கொரோனா தடுப்பூசி வாங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே தடுப்பூசிதட்டுப்பாடு ஏதுமில்லை. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் தடுப்பூசி செலுத்தப்படும்’’ எனத் தெரிவித்தார்.

;