india

img

கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி  

இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளில் உலக சுகாதார அமைப்பு, கோவிஷீல்டுக்கு மட்டும் அவசர கால அனுமதி வழங்கியது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக் கால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் பட்டியலில் கோவாக்சினும் சேர்க்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளது. எனவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிப்பதில் இனி சிக்கல் இருக்காது என கூறியுள்ளது. 

;