மதுரை:
தூத்துக்குடி மாவட்டம், உழக்குடி கிராமத்தை தொல்லியல் துறையின் முதன்மைச் செயலர்,ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை தாக் கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ், சென்னை உயர் நீதிமன்றமதுரைக் கிளையில் பொதுநல வழக் கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தூத்துக்குடி மாவட்டம் களியாவூர் பஞ்சாயத்தில் உழக்குடி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்தபகுதியில் கல் சக்கரங்கள், இரும்பு உருக்கு உலை போன்ற பல பொருட் கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இப்பகுதியில் நெடுங்கற்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ், ஸ்வீடன், அயர்லாந்து, தென் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நெடுங்கற்கள் கண் டெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே உழக்குடி கிராமத்தில் காணப்படும் நெடுங் கற்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன.உழக்குடி கிராமம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகியபகுதிகளுக்கு அருகிலேயே அமைந் துள்ளது. ஆகவே உழக்குடி கிராமத்தையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அகழாய்வு மேற் கொள்ளக் கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.ஆகவே தூத்துக்குடி மாவட்டம் உழக்குடி பகுதியில் அமைந்துள்ள நெடுங்கல் சான்றை அடிப்படையாகக் கொண்டு, உழக்குடி கிராமத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அகழாய்வை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு தொல்லியல் துறையின் முதன்மைச் செயலர், உழக்குடி கிராமத்தை ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவும் வேண்டும் என்று திங்களன்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.