court

img

தமிழகத்தில் எத்தனை மதுபானக் கடைகள் உள்ளன? தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

மதுரை:
தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை மதுபான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? இதில் எத்தனை மதுபான கடைகளில் அத்துமீறல் நடைபெற்று வருகிறது? அத்துமீறல்கள் நடைபெற்ற எத்தனை மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?  என நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தபொதுநல மனுவில், “கும்பகோணம் புதிய ரயில் நிலைய சாலையில் மசூதி, சர்ச் மற்றும் பள்ளி உள்ளதால் அப்பகுதி மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில்புதிய மதுபானக் கடை அமைப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என  மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வுமுன்பு செவ்வாயன்று  விசாரணைக்கு வந்ததுஅப்போது நீதிபதிகள் வழக்கில் தமிழக தலைமைச் செயலாளரை எதிர் மனுதாரராக சேர்த்தனர். மேலும் தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை மதுபானக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? இதில் எத்தனை மதுபான கடைகளில் அத்துமீறல் நடைபெற்று வருகிறது? அத்துமீறல்கள் நடைபெற்ற எத்தனை மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்தக் கேள்விகளுக்கு தமிழக தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.