சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவி புரொகிராமர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பு விபரங்கள் பின்வருமாறு
சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவி புரொகிராமர் பணிக்கு 46 காலி இடங்கள் உள்ளது. நேரடி பணி நியமன முறையில் நிரப்ப ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிக்கு பிஎஸ்சி, பிகாம்,பி.ஏ. பொருளாதாரம், புள்ளியியல்பட்டமும், மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் முதுகலை டிப்ளமோ பட்டமும் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பிஇ, பிடெக், எம்எஸ்சிபட்டம், எம்எஸ்சி (ஐடி), எம்எஸ்சிடேட்டா சயின்ஸ், எம்சிஏ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு வயது வரம்பு 30. இடஒதுக்கீடு பிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசி-முஸ்லிம்) 35. எழுத்து தேர்வு, திறன் தேர்வு (புரொகிராமிங் ஸ்கில்), நேர்காணல் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். ஆன்லைனில் (www.mhc.tn.gov.in) விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 15-ம் தேதி. மேலும் விவரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.