புதுதில்லி:
வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் வகையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அதிமுக அரசால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.இதனை சட்டசபையில் அறிவித்த அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘இது தற்காலிகமானதுதான். சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவடைந்த பிறகு மாற்றி அமைக்கப்படும்’ என்று கூறினார்.