court

img

சகிப்புத்தன்மையே மதத்தின் அடிப்படை... தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேச்சு....

ஹைதராபாத்:
பொதுநலனும் சகிப்புத்தன்மையுமே ஒரு மதத்தின்சாராம்சமாக இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறியுள்ளார்.

சிகாகோவில் விவேகானந்தர் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவின் 128-ஆவது ஆண்டு தினம் ஹைதராபாத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் காணொளி வாயிலாக பங்கேற்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா மேலும்கூறியிருப்பதாவது:

அரசியல் அமைப்புச் சட்டத்தில் சமத்துவம் வலியுறுத்தப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே விவேகானந்தர் மதச்சார்பின்மையை வலியுறுத்தியுள்ளார். பொதுநலனும், சகிப்புத்தன்மையும் மட்டுமே மதத்தின்உண்மையான சாராம்சம் என்பதில் அவர் தீராத நம்பிக்கை கொண்டிருந்தார். மதம் என்பது மூடநம்பிக்கைகளை கடந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.சகிப்புத் தன்மை, அனைவரையும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவை குறித்தே சிகாகோ உரையில் விவேகானந்தர் குறிப்பிட்டார்.நாட்டில் உள்ள பிரிவினைகளால் சமூகத்துக்கும் நாகரிகத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். நாட்டைஎழுச்சியுறச் செய்ய வேண்டுமெனில் விவேகானந்தரின் கொள்கைகளைத் தற்போதைய இளைஞா்களிடம் புகுத்த வேண்டும். பொதுநலன், சகிப்புத்தன்மை மூலமாக மட்டுமே இந்தியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தமுடியும். இவ்வாறு என்.வி. ரமணா பேசியுள்ளார்.