மதமாற்ற தடைச் சட்டம் தொடர்பாக பதிலளிக்கும்படி மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதமாற்ற தடைச் சட்டத்துக்கு தடை கோரிய மனு மீது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் பதிலளிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தச் சட்டங்களின் செல்லுபடித்தன்மையை எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மனுக்களையும் உச்ச நீதிமன்ற வழக்காக மாற்றிக் கொள்ளவும் முடிவு செய்தது.
மாநில அரசுகள் பதிலளிக்க நான்கு வார கால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம் இவ்வழக்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.