பெரம்பலூரில் ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநாடு - பேரணி
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) 10வது மாநில மாநாட்டின் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாநில துணைத்தலைவர் பி.கருப்பையன் கொடி யசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார். பெரம்பலூர் பாலக்கரையில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று வானொலித்திடலில் (தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் திடல்) நிறைவடைந்தது. 3,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் வி.குமார் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிஐடியு தலைவர்கள் அ.சவுந்தரராசன், எஸ்.கே.மகேந்திரன், சம்மேளன தலைவர்கள் பொதுச்செயலாளர் எம்.சிவாஜி, எஸ்.பாலசுப்பிரமணியன், இ.உமாபதி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.