தில்லி பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் வாயில் அருகே, பாதுகாப்பு உபகரணங்கள் எதிவுமின்றி சிறுவன் உட்பட தொழிலாளர்கள் சாக்கடையை கையால் சுத்தம் செய்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில், தில்லி பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அவர்கள் அபராத தொகையை 4 வாரங்களில் செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.