புதுதில்லி:
சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தை-மகன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனு தொடர்பாக சிபிஐ, தமிழக டிஜிபி பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரையும் சாத்தான்குளம் காவல்துறை யினர் கொடூரமாகத் தாக்கி கொன்றனர். இந்த வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வியாழனன்று நடைபெற்றது. அதில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனு தொடர்பாக சிபிஐ, தமிழக டிஜிபி பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.