court

img

சாத்தான்குளம் கொலை வழக்கை  கேரளத்துக்கு மாற்றக்கோரி முறையீடு...   சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்....

புதுதில்லி:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான  ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரை சாத்தான்குளம் காவல்துறையினர் கொடூரமாகத்தாக்கி கொலை செய்தனர். 

இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து  வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 2 வழக்குகளில்,  அதிகாரிகள் உள்பட 9 காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணையை கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு மாற்றக்கோரி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷிராய், சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணையை கேரளத்துக்கு மாற்றக்கோரிய வழக்கில் சி.பி.ஐ. மற்றும் வழக்கில்குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏனைய 8 பேரும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.