court

img

கடன், வட்டி செலுத்துவதில் சலுகை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடுக... உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்- விசாரணைக்கு ஏற்பு...

புதுதில்லி:
கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் வரை கடனுக்கான வட்டிசெலுத்துவது மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் சலுகை அளித்து மக்களின்நிதி அழுத்தத்தை குறைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்என்று வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருந்துவரும் இந்த காலத்தில் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மக்களுக்கு அளித்துள்ள கடனுக்கு வட்டித் தள்ளுபடி வழங்க வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 6 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் அல்லது கொரோனா பரவல் முடியும் வரை சலுகை அளிக்கவேண்டும்.இந்த காலக்கட்டத்தில் கடனை, வட்டியை செலுத்த முடியாதமக்கள் மீது எந்த வங்கியும், நிதிநிறுவனம் அவர்களின் சொத்துக்களை ஏலம் விடாமல் தடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். கடனை திருப்பிச் செலுத்த முடியாத, வட்டி செலுத்தமுடியாத மக்களின் வங்கிக்கணக்கை இந்தக் காலகட்டத்தில் வராக் கடன் பட்டியலிலும் சேர்க்கக்கூடாது. கொரோனா வைரஸ் பரவல்2-வது அலையில் மக்களுக்கு கூடுதலாக எந்த அழுத்தமும் தராமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இந்தக் காலக்கட்டத்தில் மக்களுக்கு நிதிச்சுமை குறைய வேண்டும். மக்கள் தங்களின் சுயமரியாதையை இழந்துவிடக்கூடாது. நிதிக்கொள்கைகள் அரசால்தான் வகுக்கப்படுகின்றன. நிதிக்கொள்கைக்கு அப்பாற்பட்ட இந்த காலக்கட்டத்தில் வாழ்வதே கேள்விக்குறியாக இருக்கிறது.ஆதலால் நம்நாட்டு மக்கள் மரியாதையுடனும், எந்தவிதமான மனஅழுத்தமும் இன்றி வாழ வேண்டும்.

ஊரடங்கு  நடவடிக்கை பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு இயல்பாகவே பொருளாதார நெருக்கடி , அழுத்தம், மருத்துவ அவசரநிலை போன்றவை ஏற்பட்டு மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். ஏராளமான பொருளாதார இழப்புகளையும், குடும்பத்தினர் இழப்புகளையும் சந்தித்துள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.மே  24 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிபதிகள் அமர்வு விசாரிக்க முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்ஆர். ஷா, அசோக் பூஷாந்த் ஆகியோர் அமர்வு இந்த மனுவை விசாரிக்கிறது.