புதுதில்லி:
சாலைகளை மறித்து போராட்டங்கள் நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் மீண்டும்திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சாலைகளில் எவ்வித இடையூறும் இல்லாமல் போக்குவரத்து இருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருவதாக மோனிகாலால்என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக தில்லி, ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.