புதுதில்லி,மார்ச்.21- தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் அண்மையில் தீ விபத்தில் ஏற்பட்டபோது கட்டுக் கட்டாகப் பணம் இருந்தது தொடர்பாகத் தீயணைப்புத் துறையினர் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் சோதனை நடைபெற்றது.
அந்த சோதனையில் யஷ்வந்த் வர்மா வீட்டிலிருந்து ரூ.100 கோடிக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அவரை மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்ய கொலீஜியம் முடிவு செய்துள்ளது. ஆனால் யஷ்வந்த் வர்மாவை பணி நீக்கம் செய்து முறையான நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.