court

img

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு... அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை:
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள்இடஒதுக்கீட்டில் இடம் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக் கில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர், பள்ளி கல்வித் துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தங்களது கழகத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் 2400 அரசு உதவிபெறும் தமிழ்வழிப் பள்ளிகள் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.தங்களுடைய பள்ளிகளுக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அரசுப் பள்ளிகளுக்கான சலுகைகள், கொள்கைகள், பாடத்திட்டம், போதிக்கும் முறை, உதவிகள் அனைத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும்.ஆனால், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு என்பது பாரபட்சமானது.அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர் படிப்பதால் அவர்களுக்கும் உள்ஒதுக்கீட்டில் இடம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர், பள்ளிக் கல்வித் துறைச் செயலர், உயர் கல்வித் துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி5ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.