சென்னை,பிப்.14- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேரணி நடத்தத் தடை விதித்து இந்து முன்னணி அமைப்பினருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக சென்னையில் பேரணி நடத்த அனுமதி கோரி, பாரத் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகி தாக்கல் செய்த மனுவைத் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு? தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்கப் பார்க்கிறீர்கள் என பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.