court

img

சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை,ஏப்.22- சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இசை வேளாளர் என்பதற்கு இசை வெள்ளாளர் எனத் தவறாகக் குறிப்பிட்டுச் சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ‘சாதி சான்றிதழ்களை வழங்கும் போது தமிழ், ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக எழுத்துப் பிழை இன்றி சாதி சான்றிதழ்கள் இருக்க வேண்டும். சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக்கூடாது’ என உத்தரவிட்டனர்.