court

img

சாம்சங் தொழிலாளர்கள் நள்ளிரவில் கைது - ஆட்கொணர்வு மனு தாக்கல்

காஞ்சிபுரம்,அக்டோபர்.09- சாம்சங் தொழிலாளர்களை நள்ளிரவில் வீடுகளுக்குச் சென்று கைது செய்து காவல்துறையினர் அராஜகம். சிஐடியு சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள இருந்த நிலையில், நேற்று நள்ளிரவில் தமிழ்நாடு காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்களை வீடுகளுக்குச் சென்று மிரட்டி கைது செய்துள்ளனர், 
அதுமட்டுமின்றி போராட்டம் நடைபெறும் இடத்தில் போடப்பட்டிருந்த பந்தல்களையும் அகற்றியுள்ளனர்
தமிழ்நாடு காவல்துறையின் இந்த அராஜக போக்கை சிஐடியு தலைவர் சௌந்தர ராஜன் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்நிலையில் சிஐடியு சார்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரிக்கவும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை இன்று பிற்பகல் விசாரிக்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது